2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

98 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் தையல் பயற்சியை பூர்த்தி செய்த 98 பெண்களுக்கு, சான்றிதழ் மற்றும் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, இன்று (28) முற்பகல் 10 மணியளவில் எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் ம.வி பாடாசாலையில் நடைபெற்றது.

சிறிய நடுத்தர அளவிலான வியாபாரம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் நிதி உதவியுடன், தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஊடாக பெண்களின் வாழ்வாதராத்தை மேம்படுத்தும் வகையில் எருக்கலம்பிட்டி கிராம சேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 98 பெண்களுக்கு, அவர்களின் சுய தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் தையல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவர் அஜித் ஜெயவர்த்தன, மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .