2021 மார்ச் 08, திங்கட்கிழமை

அதிகாரிகளை திட்டியவர்களை கைதுசெய்ய உத்தரவு

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி புதுமுறிப்புப் பகுதியில் அரச உத்தியோகத்;தர்களுக்கு இடையூறு விளைவித்து தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டவர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற  நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.
 
கிளிநொச்சி புதுமுறிப்பு கோணாவில் யூனியன்குளம் ஆகிய பகுதிகளில் பாடசாலை செல்லாத சிறுவர்களை மீள இணைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், பொலிஸார், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இடையூறு விளைவித்து அவர்களை மீது தகாத வார்த்தைப்பிரயோகம் மேற்கொண்;;ட பாடசாலை செல்லாத பிள்ளைகளின் பெற்றோர், பாதுகாவலர்கள் தொடர்பாக நீதவான் முன்னிலையில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
 
இதனை அடுத்;து, குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு கிளநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .