2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

உபகரணங்கள் கையளிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் தொழில்நுட்பகூடத்துக்கான ஒரு தொகுதி தொழிற்பயிற்சி உபகரணங்கள், இன்று (14) காலை, மன்னார் வேல்ட் விஷன் லங்கா அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, பாடசாலையின் அதிபர் ரி.தனேஸ்வரன் தலைமையில், பாடசாலையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் வேல்ட் விஸன் லங்கா அமைப்பின் முகாமையாளர் எஸ்.பி.பிறேமச்சந்திரன், திட்ட பணிப்பாளர் எம்.உதயகுமார், மன்னார் வலயக் கல்வி பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர் கே.சுகிர்தன், தொழில் நுட்பபிரிவு பொறுப்பு ஆசிரியர் துரை ராஜா ஜோன்சன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மன்னார் வேல்ட் விஷன் லங்கா அமைப்பின் முகாமையாளர் எஸ்.பி.பிறேமச்சந்திரன் தொழில்நுட்ப உபகரணங்களை மாணவர்களிடன் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--