2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

சண்முகம் தவசீலன்   / 2018 மார்ச் 20 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு அளம்பில் பிரதேசத்தில் செய்திச் சேகரிக்கச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.

அளம்பில் பிரதேசத்தில் துயிலும் இல்லங்கள் அமைந்திருக்கும் தனியார் காணியொன்றை கையகப்படுத்தும் முயற்சியில் இராணுவம் ஈடுபடுவதாக வெளியான தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் ஒருவர் சென்றுள்ளார்.

குறித்த இடத்துக்குச் சென்ற ஊடகவியலாளரை தடுத்த இராணுவத்தினர், அவருடைய கமராவை சோதனையிட முயற்சித்துள்ளனர்.

எனினும் அதற்கு ஊடகவியலாளர் மறுப்பு தெரிவித்தமையால், இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் அவரிடம் விசாரணை செய்துள்ளார். இதனிடையே அந்த இடத்துக்குச் சென்ற மற்றுமொரு படை அதிகாரி, “இது உங்கள் காலம் என்பதால் ஆடுகிறீர்களோ”? என்று கடுந்தொனியில் ஊடகவியலாளரிடம் பேசியுள்ளார்.

மேலும், விசாரணை மேற்கொண்ட இராணுவத்தினர், குறித்த ஊடகவியலாளரை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X