Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவான நிர்மாணக்கப்பட்ட நினைவுத் தூபி, பல்வேறு தடைகளுக்கு மத்தியில், இன்று (14) திறக்கப்பட்டது.
குறித்த நினைவுத் தூபியில், படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பொறிக்கவும் அவர்களுடைய பெயர்களை எழுதவும் தடைவிதித்திருந்த பொலிஸார், நினைவுத் தூபியை மட்டும் நிர்மாணிக்க அனுமதி வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், இன்று (14) குறித்த நினைவுத் தூபியில், நிரந்தரமாக மாணவர்களுடைய புகைப்படங்களை பதிக்க முடியாவிட்டாலும், தற்காலிகமாக மாணவர்களுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்டும் “செஞ்சோலை வளாக வீதி” என எழுதப்பட்ட நிலையிலும், குறித்த நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிவமோகன் உள்ளிட்டவர்கள் இணைந்து, நினைவுத் தூபியை திறந்து வைத்தனர்.
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago