Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தமிழர்களுக்கு கல்வி ஒன்று தான் கையில் இருக்கும் இறுதி ஆயுதமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், அதன் மூலம் தான் தமிழர்கள் மீண்டெழ முடியுமெனவும் கூறினார்.
வவுனியா சைவ பிரகாச ஆரம்பப் பாடசாலையின் கற்றல் வள நிலையத்தை இன்று (09) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனத்தின் கல்வியில் தான் கை வைக்க வேண்டுமெனவும் அதனால் தான் தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக, யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ஓர் இனம் தன்னைப் பாதுகாத்து கொள்ள வேண்டுமானால், முதலில் தன்னுடைய கலாசாரம், மொழியை பேணிக்காக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், இல்லாவிடில் அந்த இனம் அழிந்துவிடுமெனவும் கூறினார்.
எங்கு சென்றாலும் எமக்கு வீடு தாருங்கள்; வாழ்வாதாரம் தாருங்கள் என்று தான் தமது மக்கள் கேட்பதாகவும் அந்த நிலை மாற்றபட்டவேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago