2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

‘நானும் இணைந்து போராடுவேன்’

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வைத்தியர்கள் கிடைக்காத பட்சத்தில், மக்களுடன் இணைந்து தானும் போராடவுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு, நேற்று (12) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், போராட்டத்தின் மூலமே மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அப்படி போராடும்போது, மக்களுக்கு அருகில் தனக்கும் ஓர் இடத்தை ஒதுக்கித் தாருமாறும் கேட்டுக்கொண்டார்.

முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு, இரண்டு மாதங்களுக்குள் இரண்டு வைத்தியர்களைப் பெற்றுக்கொடுப்பதே தனது நோக்கமெனத் தெரிவித்த அவர், இது குறித்து உரிய தரப்புடன் பேசப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அடுத்த மாதமளவில், 250 வைத்தியர்களின் விண்ணப்பத்தில்  40 வைத்தியர்கள் வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்படுவுள்ளதாகவும் அதில், ஆறு அல்லது ஏழு பேர் மன்னார் மாவட்டத்துக்கு நியமிக்கப்படவுள்ள நிலையில், அதில் முருங்கனுக்கு என இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்படுவார்களெனவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன், தற்பொழுது பணிபுரியும் வைத்தியர்களுக்கான இடமாற்றம் வரும்போது, அந்த இடத்துக்கான வைத்தியரை பெற்றவுடன் இடமாற்றத்துக்கு அனுமதிக்க வேண்டுமென, அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .