Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன், செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலை வளாகத்தில், மனித எச்சங்கள் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றின் உத்தரவுக்கமைய இன்றைய தினம் (13) மேலதிக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனுஷன் தலைமையில் பொலிஸார், தடயவியல் பொலிஸார், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் பங்கு ற்றுதலுடன், இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் சில, இரண்டு பேருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட தடையப்பொருள்கள் சட்ட வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன.



9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026