Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இளைஞர், யுவதிகளை நவீன யுகத்தினுள் உள்ளீர்கும் முகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டம், இன்று (7) காலை 10 மணிக்கு, மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில், அதன் மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.மஜித் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிராம ரீதியாக உள்ள இளைஞர்களை 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உள்வாங்கி, எதிர்கால தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக குறித்த நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோக ராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதிகளான ஜசோதரன், ஜோசப் நயன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்கள் இணையத்தளத்தின் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு, எதிர்கால செயற்றிட்டங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
33 minute ago
54 minute ago