2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

மிதிவெடி வெடிப்பு; மற்றுமொருவரும் உயிரிழப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்,சண்முகம் தவசீலன்

மாங்குளம் பகுதியில், திங்கட்கிழமை (03) மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிந்த போது, மிதிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நபரும், நேற்று (05) மாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிசைப் பிரிவில் சிகிசை பெற்று வந்த நிலையிலேயே, அவர் மாலை 4 மணியளவில் சிகிசை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், ஏற்கெனவே, வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இராஜேந்திரன் நிதர்சன் (28) என்வரும் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X