Editorial / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன், சண்முகம் தவசீலன்


முல்லைத்தீவுக்கான வட்டுவாகல் பாலத்தினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியில், கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ளது.
குறித்த காணியை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (22) அளவீடு செய்யப்படும் என காணி நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சுவீகரிப்பை கைவிடுமாறு கோரி, கடற்படை முகாமுக்கு முன்பாக காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வேறு பாதையூடாக, நில அளவையாளர்கள் இராணுவ முகாமுக்குள் சென்றுவிட்டதாகவும் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும், நில அளவீட்டை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்து வட்டுவாகல் பாலத்தை மறித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டச் செயலர் நேரில் வருகை தந்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago