2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வவுனியாவில் யாருக்கும் தொற்று இல்லை

Niroshini   / 2021 ஜனவரி 21 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வவுனியாவில், பத்து நாள்களின் பின்னர் நேற்று (20)  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பூச்சியமாக அமைந்துள்ளது.

வவுனியா - பட்டாணீசூர் மக்கள் மற்றும் நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய 2,000க்கும்  மேற்ப்பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (19) வரை தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று  (20) முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் எவரும் அடையாளப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .