2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

போலி ஆவணம் தயாரிக்கும் நிலையம் பொலிசாரால் முற்றுகை

Super User   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)
 
வவுனியா நகரில் பொதுமக்களுக்கு தேவையான ஆவணங்களை மூலப்பிரதி போன்று போலியாக தயாரித்து வழங்கி பணம் சம்பாதித்து வந்த ஒரு நிலையத்தை பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது அதன் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.  

இங்கு நூற்றுமேற்பட்ட போலியான சாரதி அனுமதிபத்திரங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிப்பதற்கு தயாரான நிலையில் இருந்த வேளையிலேயே அது முற்றுகையிடப்பட்டது.

போலியான சாரதி அனுமதிப்பத்திரத்துடன் போலியான தேசிய அடையாள அட்டைகள், பிறப்பு சான்றிதழ்கள், மற்றும் கனணி உபகரணங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--