2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மன்னார் மாவட்ட அரச அதிபர் - வரியிறுப்பாளர் சங்கம் சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெனி

மன்னார் மாவட்ட வரியிறுப்பாளர் சங்கத்திற்கும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவுக்கும் இடையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பிற்காக அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் பலர் சமூகமளிக்காததன் காரணத்தினால் தீர்மானங்கள் எவையும் எட்டப்படாத நிலையில் இச்சந்திப்பு முடிவடைந்ததாக  மன்னார் மாவட்ட வரியிறுப்பாளர் சங்கத்தின் பொருளாளர் ஐ.சால்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட மக்களின் நலன் கருதி கடந்த வருடம் மன்னாரில் மன்னார் மாவட்ட வரியிறுப்பாளர் சங்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்சங்கம் மன்னார் நகரசபையுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் முகமாக தீர்மானங்களை ஏற்கெனவே மேற்கொண்டிருந்தோம்.

இந்நிலையில் நேற்றையதினமும் வரியிறுப்பாளர் சங்கத்திற்கும் திணைக்களங்களின் தலைவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சந்த்ப்ப்புக்கு
வரியிறுப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளும் அரசாங்க அதிபரும் மன்னார் நகரசபையின் தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இருப்பினும் ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

மன்னார் நகரசபையுடன் இணைந்து மன்னார் மாவட்ட வரியிறுப்பாளர் சங்கம் மேற்கொள்ளவிருந்த பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர மற்றும் நகரசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

எனினும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளாததால் இச்சந்திப்பின்போது தீர்மானங்கள் எவையும் எட்டப்படாது இச்சந்திப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .