2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஆரம்பம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் செவ்வாய்க்கிழமை (22) காலை ஆரம்பமாகியது.

கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருதல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், மதியாபரணம் சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, மற்றும் வடமாகாண 4 அமைச்சர்கள், உள்ளுராட்சி மன்றங்களில் தலைவர்கள், நீர்வழங்கல் அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .