2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 10

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1780: மேற்கிந்தியத் தீவுகளில் வீசிய சூறாவளியினால் 20,000-30,000 பேர் பலி.

1845: அமெரிக்க கடற்படை பயிற்சிக் கல்லூரி 50 மாணவர்கள் 7 பேராசிரியர்களுடன் செயற்படத் தொடங்கியது.

1846: வில்லியம் லஸேல்லினால் நெப்டியூனின் சிறுகோளான ட்ரைடொன் கண்டுபிடிக்கப்பட்டது.

1892: ஹொங்கொங்கின் தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் தாய்வானிலிருந்து கப்பலில் வருகையில், கப்பல் உடைந்து விபத்து ஏற்பட்டதால் உயிரிழந்தனர்.

1913: அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் பனாமா கால்வாய் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

1913: சீனாவின் முதலாவது ஜனாதிபதியாக ஜுவான் சிகாய் பதவியேற்றார்.

1933: அமெரிக்காவின் யுனைட்டெட் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானமொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டினால் தகர்க்கப்பட்டதால் 7 பேர் பலி. வர்த்தக விமானசேவை வரலாற்றின் முதல் விமானமொன்று நாசவேலை மூலம் தகர்க்கப்பட்டமை இதுவே முதல் தடவை.

1942: அவுஸ்திரேலியாவுடன் சோவியத் யூனியன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தது.

1944: நாஸிகளால் ஜிப்ஸி இன பிள்ளைகள் 800 பேர் கொல்லப்பட்டனர்.

1957: கானா நாட்டின் நிதியமைச்சருக்கு சேவை வழங்க டெலேவர் மாநில உணவு விடுதியொன்று மறுத்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஐஸன்ஹோவர் மன்னிப்பு கோரினார்.

1964: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முதல் தடவையாக செய்தி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

1970: பிஜி சுதந்திர நாடாகியது.

1975: பப்புவா நியூகினியா ஐ.நா.வில் இணைந்தது.

1986: எல்சல்வடோரில் பூகம்பத்தினால் 1500 பேர் பலி.

1997: உருகுவேயில் விமானமொன்று வெடித்துச் சிதறியதில் 74 பேர் பலி.

1998: கொங்கோவில் விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டதால் 41 பேர் பலி.

2008: பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலொன்றில் 110 பேர் பலி.

2009: 200 வருடங்களாக தமது எல்லைகளை மூடிவைத்திருந்த ஆர்மேனியாவும் துருக்கியும் சுவிட்சர்லாந்தில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டபின் தமது எல்லைகளை திறந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .