2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இந்தவார பலன்கள் (12.06.2011 - 18.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (12.06.2011 - 18.06.2011)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை புத்திசாலித்தனமாக கையாளும் ஆற்றல் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் வியாபாரத்தில் நவீன நுட்பங்களை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். இதனால் பணவரவு அதிகரிக்கக்கூடும். புதிய காரியங்களை உற்சாகத்துடன் மேற்கொள்ளலாம், புதுமையான பொருள் காணக்கிடைத்தல். பிறரின் பேச்சை கேட்டு நடப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். நாவுக்கு இனிதான உணவுகள் கிடைக்கக்கூடும். பெண்களுடன் அனுசரித்து நடப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளலாம். புண்ணிய ஸ்தலங்கள் செல்லும்போது தூய்மையான ஆடைகளை அணியலாம். இவ்வார இறுதியில் பல துன்பங்கள் மத்தியிலும் சில நன்மைகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


சந்திராஷ்டமம்
ஜூன் 13ஆம் திகதி மாலை 09.53 மணியிலிருந்து ஜூன் 15ஆம் திகதி காலை 12.52 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பணிவுள்ள மனதில் பயம் இருக்காது என்பதற்கு முன் உதாரணமாக விளங்கும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நண்பர்களின் உதவியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதுக்கு மகிழ்ச்சி தரும் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் தூர பயணங்கள் செல்ல நேரிடும். தேவையற்ற பிரச்சினைகளின் போது பெரியார்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பது சிறந்ததாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமும் முன்னேற்றமும் ஏற்படும். திருடர்களினால் மனதில் பதற்றங்கள் தோன்றும். இவ்வார இறுதியில் எதிலும் முன்யோசனையுடனும் பொறுப்புடனும் செயல்படுவதால் பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
ஜூன் 15ஆம் திகதி காலை 12.52 மணியிலிருந்து ஜூன் 18ஆம் திகதி காலை 06.05 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அறிவை விட ஆர்வத்தோடு பல சாதனைகள் படைக்கும் தனித்திறன் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நீங்கள் நினைத்த காரியத்தை சாதித்து வெற்றி அடையலாம். நன்மை பயக்கும் காரியங்களில் அதிக அக்கறை செலுத்தவும். உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் தரும் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். வேலை தொடர்பான சில இடமாறுதல் ஏற்படக்கூடும். தொலைதூர பயணங்களின் போது திருடர்களிடம் மிக கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும், இதனால் பணப் பிரச்சினைகள் ஏற்படும். அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இவ்வார இறுதியில் உங்கள் திறமையினாலும் மனவலிமையினாலும் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எளிதாக வெற்றிகொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் ஏற்றமோ இறக்கமோ மனதில் மாற்றமின்றி வாழும் கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் சிலர் தமது வேலைகளை பொறுப்புடன் செய்து நற்பலனை அடைவார்கள். மேல் அதிகாரிகளுடன் சுமுகமான பேச்சுவார்த்தைகளை கடைப்பிடிக்கவும். புதிய காரியங்கள் சற்று அலைச்சலை ஏற்படுத்தக் கூடும். பெண்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவு செய்ய நேரிடும். குடும்பத்தாருடன் பிரார்த்தனைகள், பூஜைகளில் ஈடுபடுவதனால் துன்பங்கள் அகலும். வியாபார தொடர்புகளுக்காக வெளிதேச பயணங்களை மேற்கொள்வீர்கள். இவ்வார இறுதியில் தேவையற்ற பிரச்சினைகள் மனதில் பயத்தை ஏற்படுத்தினாலும் இறைவனை இடைவிடாது தியானிப்பதால் அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தனது கவலைகளை யாரிடமும் மனம்விட்டு பேசாது சிரித்த முகத்தோடு காணப்படும் சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நீங்கள் புதிதாக தொடங்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்கலாம். அழகிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். விநோத விளையாட்டுக்களில் ஆர்வத்துடன் ஈடுபடுதல். குடும்பத்தில் பெண்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்க கூடும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைத்;தல். எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். வரவு குறைந்து செலவுகள் அதிகரிக்கக்கூடும். தொழில் ஸதானத்தில் பல நவீன நுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் மனநிறைவு தரும். இவ்வார இறுதியில் நீண்ட நாள் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எந்நேரமும் சோர்வின்றி சுறுசுறுப்பாக செயல்படும் நுணுக்கமான பார்வை உள்ள கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் தீய நண்பர்களின் பேச்சை கேட்டு அனாவசிய பிரச்சினைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் நல்ல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். வாகன சாரதிகளுக்கு தூர பிரயாணங்களினால் அதிக லாபம் ஏற்படும். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. மனதளவில் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். வீடு அல்லது வேலை சம்பந்தமான இடமாற்றங்களுக்கு இடமுண்டு. பணப் பிரச்சினைகளின் போது பிறரின் உதவியை நாடும் நிலை ஏற்படக்கூடும். இவ்வார இறுதியில் எந்த காரியத்தையும் வெறுப்புடன் செய்யாது விருப்பத்துடன் செய்வதனால் அதற்கான சிறந்த நற்பலனை அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

யாருடைய துணையுமின்றி தன் முயற்சியினால் மட்டும் செயல்படும் துணிவான உள்ள கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் அன்றாட பணிகளை மேற்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய காரியங்களை உற்சாகத்துடன் மேற்கொள்ளலாம். கேட்பார் பேச்சை கேட்டு நடப்பதால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல். நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும். பகைவர்களினால் தேவையற்ற பிரச்சினைகள் தோல்விகள் ஏற்படக்கூடும். சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படுதல். இவ்வார இறுதியில் இறை தலங்கள் சென்று நம்பிக்கையுடன் தரிசிப்பதால் வாழ்வில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் அதிக தன்னம்பிக்கை உடைய விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரபம்பத்தில் நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளுதல். பெரியார்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும். பெண்களுடன் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மனகசப்பை ஏற்படுத்தும், நாவடக்கம் அவசியம். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். தூய்மையான ஆடைகளை அணியலாம். புதிய முயற்சிகளினால் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் அதிக பணவரவு ஏற்படும், வார இறுதியில் தெய்வீக வழிபாடுகள் தியானங்களில் அதிக ஈடுபாடு செலுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் நவீன வேலை திட்டங்களை மேற்கொள்ளலாம். எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். நண்பர்களுடன் வியாபாரம் தொடர்பான முயற்சிகளுக்கு தூர பயணங்கள் செல்ல நேரிடும். இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும். பெரியார்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் பெண்களினால் மகிழ்ச்சியும் நன்மையும் உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளை வாதிடுவதால் அது நமக்கே பகை ஏற்படுத்தும், வார்த்தைகளில் நிதானம் தேவை. இவ்வார இறுதியில் உங்கள் திறமையினாலும் ஆற்றலினாலும் வாழ்வில் பல சாதனைகளை மேம்படுத்தலாம்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மற்றவர்களின் மனதை புரிந்து நடந்துகொள்ளும் மென்மையான சுபாவம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் குடும்பத்தாருடன் தூர பயணங்கள் சென்று வருவீர்கள், இதனால் மனதில் சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். தூய்மையான ஆடைகளை அணியலாம். நெருங்கிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். திருடர்களினால் மனதில் பயம் ஏற்படும். பணவரவுகள் தாமதமின்றி வந்து சேரும். எந்த காரியத்திலும் கடின உழைப்பினால் மட்டுமே வெற்றி அடையலாம். அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படக்கூடும், இதனால் உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுதல். நீண்ட நாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெறவாய்ப்பு கிட்டும். இவ்வார இறுதியில் தடைபட்ட காரியங்கள் உடனுக்குடன் முடிக்கக்கூடியதாயிருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்தின்)




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஊறுமிக்க எண்ணங்களும் கம்பீரமான தோற்றமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் நீங்கள் நினைத்ததை செய்து முடிக்க அதிக அலைச்சல்களை எதிர்நோக்க நேரிடும். செயல்களில் பதற்றமும் பயமும் காணப்படும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உயர் அதிகாரிகளினால் பிரச்சினைகள், குழப்பங்கள் ஏற்படக்கூடும். அழகிய ஆடை, ஆபரணங்கள் பரிசாக கிடைக்கும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும். அறிமுகமற்ற நண்பர்களுடன் சேர்ந்து தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சில இடமாறுதல்கள் லாபகரமாக அமையக்கூடும். இவ்வார இறுதியில் புதிதாக தொடங்கும் காரியங்களில் அதிக கவனத்துடன் கையாளுவது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9- பாதங்கள்.

கருத்தாழம் மிக்க எழுத்து திறமையும் கலையுணர்வு அதிகம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகையினால் குதூகலம் ஏற்படும், விஷேடமாக பெண்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். அயல் தேசங்களிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம். வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரக்கூடும். பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள், மனதளவில் சிறு அலைச்சல்கள் ஏற்படக்கூடும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசாங்க ஊழியர்களின் மூலம் நல்ல தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும். இவ்வார இறுதியில் உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


சந்திராஷ்டமம்
ஜூன் 11ஆம் திகதி மாலை 07.54 மணியிலிருந்து ஜூன் 13ஆம் திகதி மாலை 09.53 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .