2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (17.10.2010 – 23.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (17.10.2010 – 23.10.2010)
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அயராத முயற்சியும் அதிக தன்னம்பிக்கையும் பிறருக்கு ஆபத்து காலங்களில் தேடி சென்று உதவிடும் மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் தொழிலில் திட்டமிட்டபடி தொடர்புகள் தேடி வரக்கூடும். அதனால் பணவரவுகள் ஏற்படும். குடும்பத்தில் உறவினர்கள், நண்பர்களின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் சம்பதமான உபாதைகள் வந்து நீங்கும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். எதிர்பாராத நற்செய்திகள் தேடி வரலாம். ஒரு சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்பட கூடும். திடீர் பயணங்களை மேற்கொள்ளும்போது அவதானம் தேவை. பெண்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதிகார பதவியில் இருப்பவர்களினால் சில சங்கடத்துக்குரிய சம்பவங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களின் பின் தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய முயற்சிகள் உங்களது திறமைக்கேற்ப அமையும். வார இறுதியில் மகான்களின் தரிசனம் வாழ்க்கையில் சிறப்பான வழியை காட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

உங்களின் தனித்திறனால் மற்றவர்களை கவரும் வல்லமை பெற்றவர்களாக இயல்புகளுகேற்ப செயல்பாடுகளை கொண்ட இடப ராசி அன்பர்களே..!

இந்த வார ஆரம்பத்தில் குடும்பத்தாருடன் புதிய பயணங்களை மேற்கொள்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். புத்திசாலித்தனமான திட்டங்களினால் வெற்றி அடைவீர்கள். தொழிலில் இருந்த போட்டிகள் விலகி அரச உதவிகள் தேடிவரக்கூடும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது. பணவிடயங்களில் அதிக கண்ணோட்டத்தை செலுத்தவும். பொழுதுபோக்குகளுக்காக வரவுக்கு மீறிய செலவுகளை மேற்கொள்வீர்கள். உடலுக்கு ஒவ்வாத உணவினால் உடல் பாதிப்புக்கள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். அழகிய ஆடை அணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதனால் மனநிறைவு ஏற்படும். வார இறுதியில் இறைசித்தப்படி சிக்கல்கள் சீர்திருத்தம் பெற்று, நல்வழி கிடைக்கும்.  

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஒரேஞ்
வழிபாடு: பெருமாள்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதிலும் அறிவாற்றலுடன் கூர்மையாக சிந்தித்து செயற்படும் திறனும் எளிமையாக நடந்து கொள்ளும் பக்குவமும் உள்ள மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் நவீன தொடர்புகளை கையாள்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற்றுகொள்ளலாம். திறமையான திட்டங்களினால் சிறப்பான உயர்வுகள் கிடைக்கும். குடும்ப சூழலில் உறவினர்களிக்கிடையே ஒற்றுமை பலப்படும், இதனால் உற்சாகம் ஏற்படக்கூடும். சில மேலதிகாரிகளின் செயல்கள் மனபயத்தை உருவாக்க கூடும். நன்மை பயக்கும் செயல்களை செய்வதற்கு பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் பக்கபலமாக இருக்கும். உடல் நிலையில் உஷ்ண பாதிப்புக்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுவது நல்லது. சேமிப்பை விட அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். இன்பகரமான செய்திகள் வார இறுதியில் உரிய நேரத்தில் வந்து சேரும். உறுதியான நம்பிக்கையோடு இறைவனுடன் ஒன்றிப்பதனால் துன்பங்கள் விலகி செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்

ஒக்டோபர் 15ஆம் திகதி காலை 07.46 மணியிலிருந்து ஒக்டோபர் 17ஆம் திகதி மாலை 07.56 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

சிறிய விஷயத்தையும் பெரிய அளவில் கற்பனை செய்யும் சுபாவும் எதிலும் சிந்தித்து செயற்படும் ஆற்றலும் கொண்ட கடகராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் திட்டமிட்டு செயல்களை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படும். தொழிலில் அவ்வப்போது தோன்றும் மந்தநிலை மாறி புதிய தொடர்புகள் தேடி வரக்கூடும். விநோத பயணங்களில் ஈடுபடுவதன் மூலம் அனுகூலம் ஏற்படலாம். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பொருள் வரவு சேர இடமுண்டு. அரசதுறை சார்ந்த உதவிகள் தேடி வரலாம். கோபத்தில் பேசும் வார்த்தைகள் மனசங்டங்களை உருவாக்கும், நாவடக்கம் அவசியம். அதிகாரிகளுடன் அனுசரித்து போவது நன்மை. குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படுவதுடன் பெண்களின் ஒத்துழைப்புக்கள் அதிகரிக்கக்கூடும் வார இறுதியில் பெரிய மனிதர்களின் புத்திமதிகள் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்

ஒக்டோபர் 17ஆம் திகதி மாலை 07.56 மணியிலிருந்து ஒக்டோபர் 20ஆம் திகதி காலை 08.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அஞ்சா நெஞ்சுடன் கள்ளமில்லா உள்ளமும் பெற்றிருப்பீர்கள். எதிலும் வெற்றி நடை போடவேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிம்மராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுடன் வெளி பிரயாணங்களில் ஈடுபடுவதனால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். வியாபார விரித்தியை மேற்கொள்வதற்கு பிறரின் உதவிகளை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வெளிதேசங்களிருந்து இன்பகரமான செய்திகளை கேள்விபடுவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புண்டு. சில உடல் சம்பதமான நோய்கள் ஏற்படக்கூடும், இதனால் அதிக செலவுகளை மேற்கொள்ளநேரிடும். சில எதிர்பாராத நட்புக்கள் நம்பிக்கை தரக்கூடும். புதுமையான பொருட்களை காணக்கிடைக்கும். திறமைக்கேற்ற திட்டங்களை தீட்டுவதனால் வெற்றி கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அவதானம் தேவை. வார இறுதியில் இறை சித்தபடி தடைகள் யாவும் நீங்கிச் செல்வதோடு நன்மையான காரியங்கள் செய்ய வழிகிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்

ஒக்டோபர் 20ஆம் திகதி காலை 08.37 மணியிலிருந்து ஒக்டோபர் 20ஆம் திகதி மாலை 08.04 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

சிரித்த முகத்தோடு அழகாக பேசும் திறன் கொண்டவராக இருப்பீர்கள். மென்மையான மனமும் எதிலும் நிதானமாக செயற்படும் குணமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு முயற்சி செய்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும். உணவில் வெறுப்பு தன்மை ஏற்படக்கூடும், இதனால் உடல் நலகோளாறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். குடும்பத்தில் பெண்களின் சலுகைகள் அதிகரிப்பதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படக்கூடும். மேல் அதிகாரிகளின் வீண் சகவாசங்களை தவிர்க்கவும். தொழில் முன்னேற்றத்தை மென்மேலும் விரித்தியடைய செய்ய சிலரின் ஆலோசனைகள் பக்கபலமாக இருக்கும். அழகிய ஆடைகள் அணிகலன்கள் பரிசாக கிடைக்க கூடும். புண்ணிய தலங்கள் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதனால் மனநிறைவு கிடைக்கும். வார இறுதியில் நற்குணங்களை மனதில் விதைக்க மாகன்களின் வழிகாட்டல்களை பெற்றுகொள்ளும் வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)

சந்திராஷ்டமம்

ஒக்டோபர் 22ஆம் திகதி மாலை 08.04 மணியிலிருந்து ஒக்டோபர் 24ஆம் திகதி மாலை 05.44 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

நீங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுபட்டவராக இருப்பீர்கள். எந்த செயலையும் வித்தியாசமாக இருக்க நினைக்கும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் நண்பர்களுடன் உற்சாகத்தோடு பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள். இதனால் அதிக செலவுகளை மேற்கொள்ளநேரிடும். குடும்பத்தில் சொந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது. பணம் சம்பாதிப்பதில் அதிக அக்கறை செலுத்தவும். திடீர் பயணங்கள் பயணிப்பதால் அனுகூலம். சில எதிர்பாராத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும், இதானல் மனசங்கடங்கள் உருவாகும். வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். குடும்ப சூழ்நிலையில் பெண்களின் ஆதரவு அதிகரிப்பதுடன் அறுசுவை உணவுகளும் கிடைக்க கூடும். பகைவர்களின் மறைமுக போட்டிகளினால் வியாபார வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படலாம். அவதானமாக செயற்படவும். நல்ல உறக்கம் கிடைக்க இடமுண்டு. வார இறுதியில் குலதெய்வ வழிபாடுகளில் மனதை செலுத்துவதன் மூலம் வாழ்க்கை மேன்மை பெறும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

யாரிடமும் எதையும் எதிர்பாராத தன்மையும் எப்போதும் வெளிப்படையாக பேசும் வெகுளி குணமும் கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் இசை துறையில் அதிக ஆர்வத்தை செலுத்துவீர்கள், இதனால் மன அமைதி கிடைக்கக்கூடும். திறமைக்கேற்ற ஊதியம் உரிய நேரத்தில் கிடைக்கும். வேண்டாத வாய்வார்த்தைகள் சிக்கல்களை ஏற்படுத்தலாம், சொற்களை பிரயோகிக்கும்போது நிதானம் தேவை. புதிய நண்பர்கள் நெருங்கி வரக்கூடும், இதனால் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் நவீன தொடர்புகளை கையாளுவதன் மூலம் நல்ல லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். பகைவர்களின் மறைமுக செயல்கள் மன அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை அதிகரிப்பதுடன் பெண்களின் அன்பும் பாசமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. பெரியோர்களின் தகுந்த ஆலோசனைகள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள உதவும். வார இறுதியில் விசேஷ பிரார்த்தனைகள் வார நட்களை நன்னாளாக மாற்றும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)


 

மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கூர்மையுடனும் எந்த செயலையும் தைரியத்துடன் செய்யும் ஆற்றலை பெற்றவர்கள். பொது நலம் நோக்கம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு பணவரவுகளில் சீரின்மை காணப்படும். பணவிடயங்களில் அதிக ஊக்கம் செலுத்தவும், தீய நண்பர்களின் சகவாசங்களினால் வீண் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். பொன் - பொருள்கள் பரிசாக கிடைக்கக் கூடும். தொழிலில் புதிய நுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள், இதனால் அதிக ஆதாயம். நீண்ட நாட்களின் பின் தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. கேட்போர் பேச்சை கேட்டு நடப்பதால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், சிந்தித்து செயற்படவும். விநோதங்கள் விபரிதங்களை ஏற்படுத்தாத வண்ணம் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. உடலுக்கு ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகள் வந்து நீங்கும். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும். உறவுகளுக்கிடையே நல்ல பந்தபாசங்கள் ஏற்படக்கூடும். வார இறுதியில் தெய்வ சிந்தனைகளை கடைப்பிடிக்கும் வாரமாக அமையும்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தினை இயற்கையாக பெற்றிருப்பீர்கள். கடினமாக உழைக்கும் சுபாவம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் உறவினர்களிக்கிடையே அன்யோன்யம் பலம்பெறும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் ஆடை, அணிகலன்கள் கிடைக்கக்கூடும். விடாமுயற்சியுடன் முன்னெடுக்கும் திட்டங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். வியாபாரத்தில் புதிய தொடர்புகளை நடைமுறைபடுத்துவதற்கு அரசதுறை சார்ந்த சலுகைகள் தேடிவரக்கூடும். பெண்களுடன் எதிர்பாராத கருத்துவேறுபாடுகள் உருவாகலாம், நாவடக்கம் அவசியம். வெளிதேசங்களிருந்து இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள், இதனால் மனநிறைவு ஏற்படும். அஜீரண சம்பதமான உபாதைகள் வந்து நீங்கும், உடலை பாதுகாக்கவும். பொழுதுபோக்குகளுக்காக வரவுக்கு மீறிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. வார இறுதியில் நீண்ட நாட்களின் பலனாக மகான்களின் தரிசனங்கள் பெற வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

செய்யும் செயல்களை சிறப்பாகவும் செம்மையாக செயற்படுத்தும் ஆற்றல் பெற்றிருப்பீர்கள். எதையாவது செய்து கொண்டிருக்கும் மனநிலை உள்ள கும்பராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் விடாமுயற்சிகளுடன் முன்னெடுக்கும் காரியங்கள் வெற்றியை பெற்று தரும். தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களுடன் சுமூகமான உறவை வைத்துகொள்ளவும். குடும்பத்தில் உறவினர்களிக்கிடையே அன்யோன்யம் வலிமை பெறக்கூடும். விசேடமாக பெண்களின் உதவிகளினால் மகிழ்ச்சி ஏற்படும். அதிகாரிகளுடன் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானத்துடன் செயற்படவும். ஆச்சரியமான பொருள்கள் தென்படக்கூடும்.  புதிய நண்பர்களின் நட்புக்கள் நம்பிக்ககையை தரக்கூடும். பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும். ஆகவே பிறர் சலுகை எதிர்பாராது பணவிடயங்களில் அதிக கண்ணோட்டத்தை செலுத்தவும். வார இறுதியில் பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் வாழ்க்கைக்கு வழித்துணையாக இருப்பதுடன் மனஉறுதியையும் பெற்று தரும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி


 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

ஆன்மீக சிந்தனையும் தெய்வ பக்தியும் எதிலும் கண்ணும் கருத்துமாய் செயற்படும் சுபாவமும் கொண்ட மீனராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் ஆடை, அணிகலன்கள் சேரக்கூடும். குடும்பத்தாருடன் பொழுதுபோக்குகளுக்காக விநோத பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும், இதனால் அனுகூலம் உண்டு. தொழில் ஸ்தானத்தில் அரசாங்க உதவி கிடைப்பதுடன் சில இடம்மாற்றங்களும் ஏற்படக்கூடும். இசைதுறையில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். பெண்களின் உதவிகள் மனநிறைவை தரக்கூடும். தீய நட்புகளின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. உஷ்ண சம்பதமான உபாதைகள் வந்து நீங்கும், உடல் நலனில் அக்கறை செலுத்தவும். ஆச்சரியமான பொருட்களை காணக்கிடைத்தல். எதிர்பாராத நற்செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும். வார இறுதியில் பிரச்சினைகள் நீங்கி மனநிறைவுடன் இறைவனது ஆசிர்வாதத்தை பெற்று இன்பமாய் வாழலாம்.   

அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்  
வழிபாடு: நவகிரகம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .