2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (19.06.2011 - 25.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (19.06.2011 - 25.06.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாழ்க்கையில் வெற்றி - தோல்விகளை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் மனோபலம் அதிக கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களினால் சிலவிதமான பிரச்சினைகள் தேடிவரக்கூடும். ஒவ்வாத உணவுகளினால் அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். மேல் அதிகாரிகளுடன் மனக் கசப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, வார்த்தைகளில் பொறுமை தேவை. இடம் அல்லது வேலை மாற்றங்களுக்கு இடமுண்டு. வியாபாரத்தில் பகைவர்களினால் இடையூறுகளும்; போட்டிகளும் அதிகரிப்பதுடன் இதனால் நவீன தொடர்புகள் பின்தள்ளப்படும். புதிய முயற்சிகளை தற்போதைக்கு தவிர்த்துக்கொள்வது நல்லது. வரவு குறைந்து செலவுகள் அதிகரிக்கும். இக்காலகட்டங்களில் நமது வாழ்வில் துன்பங்கள் மனதை வலிமையாக்குவது போல் உழைப்பு உடலை வலிமையாக்க உதவும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

விசித்திரமான ரசனைகளையும் எதையும் நுணுக்கமாக செய்திடும் ஆற்றல் கொண்ட இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தாருடன் ஆன்மீக யாத்திரைகள் பயணங்கள் செல்லும்போது சாதுக்களை தரிசித்து ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலை திட்டங்களை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். தாமதமான பணவரவுகள் வந்து சேரும். உயர் உத்தியோகத்தர்களுடன் சுமுகமாக செயல்படவும். திருடர்களின் நடமாட்டம் பயத்தை தரக்கூடும். மனதில் சில குழப்பங்கள் தோன்றும். சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவும். அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும். பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்ய நேரிடும். இக்காலகட்டங்களில் பணம் தேடுதல் அவ்வளவு கடினமல்ல, அதை முறையாக செலவு செய்வதே கடினம்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சில மனக் கஷ்டங்கள், கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுடன் தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் அது மனஸ்தாபத்தை ஏற்படுத்த கூடும். பணப் பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும். குடும்பத்தில் பெரியார்களின் வார்த்தைகளை கேட்டு நடப்பது நன்று. ஆச்சரியமான பொருள் காணக் கிடைத்தல். புதிய காரியங்களை தொடங்கும் போது சிறு தடைகள் தோல்விகள் ஏற்படக்கூடும். நீண்ட தேசங்களிலிருந்து எதிர்பாராத செய்திகள் கிடைக்கும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடும். தியானங்கள் வழிபாடுகளில் அதிக ஈடுபாடு செலுத்தவும். இக்காலகட்டங்களில் நமது வாழ்வில் பயமும் தயக்கமும் உள்ளவரை தோல்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)


சந்திராஷ்டமம்
ஜூன் 18ஆம் திகதி காலை 06.05 மணியிலிருந்து ஜூன் 20ஆம் திகதி மாலை 02.24 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

தனது தனித் திறனால் தன்னை சுற்றி இருப்பவர்களை கவர்ந்திடும் நற்குணங்களை கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிதாக செயல்படுத்த உள்ள திட்டத்தில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி நன்னிலை தோன்றும். பெண்களினால் சில உதவிகள் கிடைக்கக்கூடும். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்கும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். நவீன தொடர்புகளை பயன்படுத்தி அதிக லாபம் அடையலாம். அழகிய ஆடை உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். இசைத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். இக்காலகட்டங்களில் நமது சிந்தனையும் செயலும் ஒன்றாகிவிட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


சந்திராஷ்டமம்
ஜூன் 20ஆம் திகதி மாலை 02.24 மணியிலிருந்து ஜூன் 22ஆம் திகதி காலை 01.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தோற்றத்துக்கேற்ற இயல்பும் அதிக கர்வமும் சிந்தனையாற்றல் அதிகம் உள்ள சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் அதிகாரிகளின் போட்டிகள் அதிகரிப்பதுடன் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படக்கூடும். தேவையற்ற பிரச்சினைகளுக்காக அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள். உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படும். புதிய வேலைப் பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. உஷ்ண சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும், நலனை பாதுகாக்கவும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் அன்யோன்யம் வலிமை பெறும். இன்பகரமான செய்திகள் கிடைக்கும். இக்காலகட்டங்களில் தன்னலம் கருதாது உழைத்து வாழ்ந்தால் சிறப்பான உயர்வு கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


சந்திராஷ்டமம்
ஜூன் 22ஆம் திகதி காலை 01.37 மணியிலிருந்து ஜூன் 25ஆம் திகதி மாலை 02.06 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வாழ்க்கையில் பல குறிக்கோள்களுடன் வாழ விரும்பும் கண்ணிய உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நீங்கள் செய்யும் சில காரியங்களில் திருப்தியின்மை ஏற்படக்கூடும். தூய்மையான ஆடைகளை அணியலாம், வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மேன்மை அடையலாம். தீய நண்பர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுவதால் துன்பம். அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் நல்ல வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளினால் வெற்றி பெறுவார்கள்;. அதிக செலவுகளினால் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும், பணம் சேமிப்பதில் அதிக கண்ணோட்டம் தேவை. உற்சாகத்துத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இக்காலகட்டங்களில்; நாம் தூய்மையான எண்ணத்தோடு பேசினாலும் செயல்புரிந்தாலும் மகிழ்ச்சி என்றும் பின்தொடரும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

மாறுபட்ட குணங்கள் உள்ளவர்களை ஆறுதல் பேச்சால் அடக்கியாளும் திறன் கொண்ட துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது பதற்றமும் தவறுகளும் ஏற்படக்கூடும், பொறுமையுடன் செயல்படவும். மேல் அதிகாரிகளினால் சில பிரச்சினைகள் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில்; பெண்களினால் சுப விஷேசங்கள் நடைபெறும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். நீண்ட நாள் தடைபட்டிருந்த காரியங்களினை நண்பர்களின் உதவியுடன் உடனுக்குடன் முடிக்கக்கூடியதாயிருக்கும். நல்ல செய்திகள் கிடைக்கும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதனால் மனஅமைதி கிடைக்கும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் உயர்வான மாற்றம் தேவையெனில் உங்கள் சிந்தனையில் மாற்றம் தேவை.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் அதிக தன்னம்பிக்கை உடைய விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்ப உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள் சேர்க்கை. விநோத விளையாட்டுகள் விபரிதத்தை ஏற்படுத்தா வண்ணம் செயல்படவும். விசித்திரமான ஆச்சரியமான பொருள் காணக் கிடைக்கும். புதிய வேலைப் பணிகள் தொடர்பான வெளிதேச பயணங்களை மேற்கொள்வீர்கள். இசையில் அதிக நேரத்தை செலவிடுதல். நல்ல தூக்கம் நிறைவாக கிடைக்கும். வியாபார வளர்ச்சியை மேம்படுத்த அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு சாதகமாக அமையும். நண்பர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவார்கள். இக்காலகட்டங்களில் நாம் பிறருக்கு உதவியாக வாழும் வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கையின் அடையாளம் ஆகும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு உடலுக்கு ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகள் ஏற்படும், இதனால் சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் அதிகாரிகளுடனும் சக ஊழியர்களுடனும் பகை ஏற்படக்கூடும். சுற்றுலா பயணங்களுக்காக அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். கேட்பார் பேச்சை கேட்டு அனாவசிய பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்தல். சிலவிதமான கஷ்டங்கள் பயங்கள் ஏற்பட்டு நீங்கும். இக்காலகட்டங்களில் நமக்கு முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து பல சாதனைகள் படைக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய வேலை திட்டங்களை மேற்கொள்ளும் போது பணப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதுவிதமான நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி அடையலாம். பெரியார்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பது சிறந்ததாகும். உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் உறவினர்களின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பொழுதுபோக்குகளில் அதிக ஈடுபாடு செலுத்துதல். அழகிய ஆடை அணிகலன் சேர்க்கை உண்டாகும். இக்காலகட்டங்களில் ஏற்படும் சிக்கல்கள் தான் நமது வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகளை மிக உறுதியான வெற்றிகளை உருவாக்க உதவுகின்றது.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகள் தளர்வடைய வாய்ப்புண்டு. பிறரின் பிரச்சினைக்காக முன்னிற்பதால் அது நமக்கே பகை உண்டாக்கும். சேமிப்புக்கள் குறைவதுடன் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்கள் அல்லது உறவினர்களின் வருகை உற்சாகம் தரும். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். உடலால் சில சிரமங்களை எதிர்நோக்க நேரிடும், நலனை பாதுகாக்கவும். தொலை தூரத்திலிருந்து செய்திகள் கிடைக்க கூடும். வியாபாரத்தில் எதிர்ப்புக்கள் தோல்விகள் ஏற்படக்கூடும், இக்காலகட்டங்களில் எமது உண்மையான உழைப்பினால் பாதுகாப்பான வாழ்வை ஏற்படுத்திகொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

தனது கடமைகளை சரியாக செய்து நற்பெயரை பெற்றுக்கொள்ளும் மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு முயற்சியுடன் செயல்பட்ட பணிகளில் முன்னேற்ற போக்கு காணப்படும். தொழில் சம்பந்தமான தூரதேச பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்பகரமான செய்திகள் கிடைக்கக்கூடும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும். சில புதிய இடமாற்றங்கள் லாபகரமாக அமையும். ஆலய அனுஷ்டானங்களின் போது தூய்மையான ஆடைகளை அணியலாம். இசையில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். குடும்பத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற கூடும். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவுடன் செயல்படவும். இக்காலகட்டங்களில் வாழ்வில் எந்த துன்பமுமின்றி வெற்றிகள் தேடி வருவதுமில்லை முயற்ச்சிகள் இன்றி பெருமை கிடைப்பதுமில்லை.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X