2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (20.04.2014 - 26.04.2014)

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (20.04.2014 - 26.04.2014)

மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னைச் சார்ந்தவர்களுடன் ஒளிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு ஏற்றம் தரும் வகையில் வருமானம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை பரிசாக பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். புதிய வேலைக்கான ஏற்பாடுகள் முன்னேற்றம் கொடுக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள் வெற்றியடையும். ஆனாலும் வார இறுதியில் சில துக்கமான நிகழ்வுகள் உண்டாகும். உடல் நிலையில் நலிவு காணப்படும். குழப்பங்கள் தோன்றி மறையும்.    உணவு விடயத்தில் கட்டுப்பாடு தேவை. தகுந்த ஓய்வும் தேவை. சிறிது பண தட்டுப்பாடுகள் காணப்படும். எனவே வார இறுதியில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்



இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவார தொடக்கம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவே இருக்கும். எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் கூடி வரும். நவீன உக்திகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். வார இறுதியில் துக்கமான நிகழ்ச்சிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் தோன்றும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். 

அதிர்ஷ்ட திகதி : 25
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா



மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவார தொடக்கம் உங்களுக்கு சுமாராகவே இருக்கும். பணியில் சில சிரமங்கள் உண்டாகும். பணத் தட்டுப்பாடுகள் காணப்படும். எனவே பண விடயத்தில் கவனமாக இருப்பது அவசியம். நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. களவு போகும் வாய்ப்புக்கள் தென்படுகின்றன. வார இறுதியில் பணவரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். நண்பர்களுடன் பொழுதை சுகமாக களிப்பீர்கள். அதிக அளவில் லாபங்கள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.  நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 22
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)



கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பணியில் உயர் அதிகாரிகள் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். வாகன யோகங்கள் உண்டாகும். பதவி உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் காணப்படும். வியாபார முன்னேற்றம் உண்டாகும். எதிர்கால சேமிப்பிற்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். இவ்வளவு காலம் தடைப்பட்டுக் கொண்டே இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். அரசாங்க செய்திகள் மகிழ்ச்சியுடையதாய் இருக்கும். இவ்வாறு இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 22
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும். நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் நஷ்டங்கள் உண்டாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியக் குறைவால் துன்பப்படும் சூழ்நிலைகள் உருவாகலாம். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வளர்ச்சிக்கான விஷயங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. ஆனாலும் வார இறுதியில் தாய் வழி உறவில் நன்மை உண்டாகும். பொறுப்புக்கள் அதிக அளவில் காணப்படும். குடும்பத்தில் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறும். நல்ல மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி : 24
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய வியாபார ஒப்பந்தங்களுக்காக அலைச்சல் படவேண்டியிருக்கும். வயிற்றில் வலிகள் தோன்றி மறையும். பணியிடத்தில் சில சங்கடமான சூழ்நிலைகள் உண்டாகலாம். வெளியூர் பிரயாணங்கள் ஒரளவு சாதகமாக அமையும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். அரசியல் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். பெண்கள் சுய தொழிலில் லாபம் கிடைக்கப்பெறுவார்கள். சில முக்கிய பணிக்காக உங்கள் சேமிப்புக்கள் குறையும். இவ்வாறாக இந்த வாரம் உங்களுக்கு அமையும்.

அதிர்ஷ்ட திகதி : 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடிச்சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொந்தரவு கொடுத்து வந்த நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. கடின உழைப்பின் மூலம் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பணத் தட்டுப்பாடுகள் இருக்காது. அரசாங்க செய்திகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும். ஆனால் வார இறுதியில் பிறரிடம் உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வீணான மன பயங்கள் உண்டாகும். மனதளவில் சிறிது அலைச்சல் காணப்படும். இவ்வாறாக இந்தவாரம் உங்களுக்கு அமையும்.

அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே. எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கம் முதல் இறுதிவரை உங்களுக்கு சுமாராகவே செல்லும். தொழிலில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். தாய் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நண்பர்களிடத்தில் அளவுடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் பிரச்சினை உண்டாகும். தவிர்க்க முடியாத சில பயணங்கள் உண்டாகும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். துன்பமான நிகழ்வுகள் உண்டாகும். பணி சுமைக்கு ஆளாக நேரிடும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் அவசியம். வார இறுதியில் குடும்ப உறவில் மகிழ்ச்சி காணப்படும். எதிர்பார்த்த அரசாங்க செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட திகதி : 26
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்



தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் பேச்சுக்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். மன அமைதி இழந்து காணப்படுவீர்கள். இதற்காக ஆலய தரிசனம் சென்று வருவீர்கள். இடமாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்பத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.  வியாபாரம் விருத்தியடையும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது. சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் நடைபெறும். சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும். இவ்வாறாக இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா



மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தடைப்பட்ட காரியங்கள் நடைபெறும். சில மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணவரவு சுமராகவே இருக்கும். இருந்த போதிலும் சமாளித்து விடுவீர்கள். தொழிலில் அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணிமாற்றங்கள் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். ஆனாலும் வார இறுதியில் மனதில் குழப்பமான சூழ்நிலையே நிலவும். பெண்களுடன் வீண் விவாதங்களே உண்டாகும். எனவே பொறுமையை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா



கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். மனநிறைவான காரியங்களை செய்வீர்கள். இல்லத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நவீன உக்திகளால் புதிய ஆதரவைப் பெறுவீர்கள். புதிய தொழில் திட்டம் தீட்டுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். நல்லவர்களின் சேர்க்கை நல்லகாரியங்கள் செய்வதற்கு வழி வகுக்கும். வார இறுதியில் மனதளவில் துக்கம் காணப்படும். எந்த ஒரு விடயத்தையும் மனம் இன்றியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த செய்திகள் தோல்வியில் முடியும். மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார சிக்கல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்



மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் திட்டம் தீட்டுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும். அரசினருடன் சுமூகமான போக்கு காணப்படும். ஆனாலும் வார இறுதியில் பேச்சு, செயலில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பணியாளர்கள் திடீர் பணி சுமையால் துன்பத்திற்கு ஆளாவீர்கள், வீணான செலவுகள் உருவாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் நஷ்டங்கள் ஆகியவைகளை அடைய நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி : 24
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X