2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (26.09.2010 – 02.10.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (26.09.2010 – 02.10.2010)
 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சொல், செயல்களில் தெளிவும் சஞ்சல மனம் பிறகு தெளிவு உடையவர்களான மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் விட்டுபோன உறவுகள் மீண்டும் மகிழ்ச்சி ஏற்படுத்துவதுடன் பெண்களின் பரிவும் பாசமும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நல்லுறக்கம் நலனை பாதுகாக்கும். அரசாங்கத்தினால் புதிய வழிகிடைக்க கூடும். அவசரத்தில் பேசும் வார்த்தைகள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். வார்த்தைகளை பிரயோகிப்பதில் நிதானம் தேவை. நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் திருப்தியை தராவிட்டாலும் மீண்டும் முயற்சிக்கவும். கேள்விப்படும் மங்கலகரமான செய்திகள் மூலம் மனநிறைவு ஏற்படலாம். நீண்ட நாட்களின் பின் தொலைந்த பொருள் கிடைக்க வாய்ப்புண்டு. பெரியோர்களின் ஆசிர்வாதம் நீண்ட ஆயுளை பெற்று தருவதுடன் தெய்வ சிந்தனைகள் தெளிவான பாதையை காட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: பட்டு துணி
வழிபாடு: குருபகவான்


 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு தீய நட்பு தீராத பகையை விளைவிக்கும், இதனால் மனம்தளர்வு ஏற்படக்கூடும். திட்டமிட்ட கருமங்கள் திடீர் தடங்களை உருவாக்கலாம், நிதானத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை அன்யோன்யத்தை பலப்படுத்தும். வேண்டாதவர்களின் செயல்கள் மனகஷ்டத்தை ஏற்படுத்தலாம், மனம் தளராமல் இருக்கவும். உடல் உபாதைகள் வந்து நீங்கும். ஆரோக்கியத்தில் அவதானத்துடன் இருப்பதன் மூலம் பரிபூரண சுகத்துடன் வாழலாம். தொழிலை முன்னெடுப்பதற்கு பெரியோர்களின் ஆலோசனை பக்கபலமாக இருக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படுத்துவதுடன் பணம் சம்பாதிப்பதில் அதிக அக்கறை கொள்ளவும். நற்சிந்தனைகள் நல்சீர்திருத்ததை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்  
வழிபாடு: சிவன் (சூரியன்) 

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தீவிரமோ தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். அதனால் பணவரவு அதிகரிக்கும். ஆடை- ஆபரணங்கள் சேரும். நாவுக்கு உணவு இனிதே அமைய கூடும். புதிய நட்புகள் புதுவித அனுபவத்தை பெற்றுதரலாம். பயணங்கள் செல்வதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெற்று தரும். குடும்பத்தில் பெண்களுடன் ஏற்படும் கருத்துவேறுபாடு வீண்சங்கடங்களை உருவாக்கலாம். பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய திட்டங்களை முன்னெடுக்கும்போது தெளிவான சிந்தனையுடன் செயற்படவும். விநோதங்களில் ஈடுபடும்போது வேண்டாத செலவுகளை தவிர்த்துக் கொள்ளவும். அதிக அலைச்சலை மேற்கொள்ளவேண்டியிருக்கும். இறைசிந்தனைகள் வாழ்க்கைக்கு இனிதே இன்பத்தை தேடித்தரும்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சந்திரன்)


 

 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பும் கொண்ட கடகராசி  அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு அயராத உழைப்பினால் நீங்கள் நிறைவான ஆதாயத்தை பெற்றுக்கொள்ளலாம். பிறர் உதவி உபத்திரவம் ஆகாதவாறு செயற்படவும். வர்த்தகர்களுக்கு முதலீடுகள் சரியான முறையில் இலாபத்தை தராததால் பணவரவு குறைவாகவே இருக்கும். கொடுக்கல் வாங்களில் அவதானம் தேவை. உடலுக்கு ஒவ்வாத உணவால் தேக சுகம் இடை இடையே பாதிக்கக் கூடும். குடும்பத்தில் சகோதரர், சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். பொழுதை இனிதாக கழிப்பதுபோல் செலவை சிக்கனமாக காப்பது நன்று. கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும். புதிய பயணங்கள் செல்வதால் புதிய பாதையை காட்டுவதுடன் அதிர்ஷ்டத்தை பெற்று தரலாம்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)


 

 

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சிந்தனை சக்தியும் சீர்திருத்த எண்ணங்களும் உடைய நீங்கள், பிறரை கண்டு பொறாமை கொள்ளாத சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் இன்பமான நித்திரை இனிய விடியலை பெற்று தருவதுடன் உற்சாகத்தை ஏற்படுத்தும். இசைத்துறையில் முன்னேற்றம் ஏற்படுவதன் மூலம் மனநிறைவை பெற்று தரும். குடும்ப சுகம் சிறப்பாக அமையும். தூய்மையற்ற நட்பு துன்பத்தை விளைவிக்க கூடும், அவதானத்துடன் நடப்பது நல்லது. தொலைந்துபோன பொருள் திரும்பி கிடைக்க வாய்ப்புண்டு. அனாவசிய பிரச்சினைகள் துரத்தினாலும் விலகி நிற்பது நன்மை. உடலுக்கு ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகள் ஏற்படும், ஆகவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். அதிகாரிகளின் மறைமுக எதிர்ப்புக்களினால் வியாபார முன்னேற்றம் தடைப்படும். இதனால் பணநெருக்கடி ஏற்படக்கூடும். பெரியோர்களின் அன்பும் அக்கறையும் நல்வழிப்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா


 

 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

காலத்திற்கேற்ப ஆடை- அணிகலங்களை மாற்றிக் கொள்ளும் நீங்கள் பழைய கலாசாரத்தை மறக்காத கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் எதிர்பாராத புதிய செய்திகள் வாழ்வை இன்பகரமாக மாற்றும். கடின உழைப்பினால் நல்ல லாபத்தை பெற்றுகொள்ளலாம். நாவுக்கு சுவையான சாப்பாடு கிடைக்க கூடும். நன்மை செய்ய வாய்ப்புக்கள் கிடைப்பதுடன் அவை மனஅமைதியை பெற்று தரும். பழைய நட்புக்கள் நம்பிக்கையை தருவதுடன் புதிய முயற்சிகளை முன்னெடுக்க உதவியாக இருக்கும். இடத்திற்கிடம் இடம்மாற்றங்கள் நிகழாம். பயணங்கள் செல்வதால் வாழ்க்கைக்கும் புதிய அனுபவத்தை பெற்று தரலாம். உடலுக்கு ஒவ்வாத உணவால் உடல் சோர்வு ஏற்படும். நலனை காப்பது நன்று. குலதெய்வ வழிபாடுகள் குடும்ப சூழலை மாற்றுவதுடன் மன அமைதியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்  
வழிபாடு: நவகிரகம்

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 25ஆம் திகதி மாலை 01.45 மணியிலிருந்து செப்டெம்பர் 27ஆம் திகதி காலை 12.01 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

 

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

துயரங்கள் துரத்தினாலும் வெளிகாட்டாமல் புன்னகையுடன் உற்சாகமாக பேசும் துலா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் சில உணவுகள் மூலம் உடல் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும், எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தூய்மையானது துன்பத்தை போக்கி, தூய வழிபாடுகள் செய்ய துணையாக இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை முன்னெடுப்பதால் விரிவான முன்னேற்றம் காணப்படும். அனாவசிய பிரச்சினைகளில் தலையிடுவதால் மனசஞ்சலங்கள் உருவாகும். பொன் பொருள் கிடைக்கக்கூடும். நட்பு வட்டம் பெருகவாய்புண்டு. நீண்ட தூர செய்திகள் மனநிறைவை தரலாம். நெடுநாள் பிரார்த்தனைகளின் பலனாக மகான்களின் தரிசனத்தை பெற்றுகொள்வதுடன் வாழ்க்கைக்கு சுபீட்ஷத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
வழிபாடு: நவகிரகம்

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 27ஆம் திகதி காலை 02.01 மணியிலிருந்து செப்டெம்பர் 30ஆம் திகதி காலை 08.09 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட  எளிமையை விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு பணவரவுகளில் தாமதங்கள் ஏற்படுத்த கூடும். ஆகையால் பணப்பாதையை வலுபெற செய்யவும். முன்னெடுக்கும் முயற்சிகள் முதலும் முடிவையும் தராவிட்டாலும் நம்பிக்கையுடன் செயற்படவும். விநோதங்கள் விபாரீதத்தை ஏற்படாத வண்ணம் கையாளவும். வேண்டாத செலவுகளை தவிர்த்து கொள்வது நல்லது. குடும்பத்தில் பெண்களின் அன்பும் ஆதரவும் மனநிறைவை ஏற்படுத்தும். வாயார உணவும் வயிறார நிறைவும் கிடைக்க கூடும். தொழிலை மேம்படுத்த அரசினால் கிடைக்கும் ஆதாயம் அனுகூலத்தை ஏற்படுத்தும். கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக அலைச்சலை மேற்கொள்ளவேண்டியிருக்கும். தெய்வ வழிபாடுகளினால் வாழ்க்கைக்கு புதிய திருப்புமுனையாக அமையும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 30ஆம் திகதி காலை 08.09 மணியிலிருந்து ஒக்டோபர் 02ஆம் திகதி மாலை 01.22 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

 

மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தலைகுனிவு ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும் பொது நலனில் அக்கறை கொண்டவர்களுமான தனசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் புண்ணிய பூஜைகளும் நல்ல காரியங்களும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் நல்லுறவு நம்பிக்கை தரக்கூடும். இசையில் ஈடுபடுவதால் மனம் சாந்தி ஏற்படுவதுடன் மகிழ்ச்சியையும் பெற்று தரும். பயணங்கள் பாதகங்களை விளைவிக்காத வண்ணம் பயணிக்கவும். நவீன திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். வரம்பு மீறிய வார்த்தைகள் வன்மையான விளைவை ஏற்படுத்தலாம். எனவே நாவடக்கம் அவசியம். தொழில் முன்னேற்றத்தில் சில தடங்கலை காட்டும், விடாமுயற்சியுடன் முன்னெடுக்கவும். சீரான சிந்தனைகள் சிறப்பான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு ஒரேஞ்  
வழிபாடு: சிவன் (சூரியன்)


 

 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யாத, மனதில் பட்டதை பளிச்சென பேசும்  பழக்கமுடைய மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் தொழில்சார் முன்னேற்றங்களினால் பணவரவு அதிகரிக்க வாய்ப்புண்டு. நம்பகமான முடிவுகள் நற்பலனை ஏற்படுத்துவதுடன் நம்பிக்கையை தரக் கூடும். சுவையான சாப்பாடு, சுகமான உறக்கம் இரண்டுமே சுபீட்ஷமாக காணப்படும். புதிய நட்புக்களின் பெருக்கம் உற்சாகத்தை ஏற்படுத்தும். அயல் தேசசெய்திகள் எதிர்பாராத மகிழ்ச்சி ஏற்படுத்தலாம். புதிய திட்டங்களை முன்னேடுப்பதால் அது தோல்வியை தரக்கூடும். உடல் உஷ்ணங்கள் வந்து நீங்கும். கேட்பார் பேச்சை கேட்டு நடந்தால் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். இதனால் மனம்தளர்வு ஏற்படும். குலதெய்வ வழிபாடுகள் குடும்பத்திற்கு லக்ஷ்மி கரத்தை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்  
வழிபாடு: சிவன் (சூரியன்)


 

 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மாறுபட்ட குணங்களை கொண்டவர்களிடமும் யதார்தமாக பேசி பிறர் மனதை அடக்கி ஆளும் கும்ப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் குடும்பத்தில் உறவுகளின் பலம் உற்சாகத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும். திடமற்ற நட்புக்கள் தடம்புரலக் கூடும், எனவே தடைகளை தாண்டி செயற்படவும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை முன்னெடுப்பதால் ஒப்பந்தங்கள் தேடி வரும். இதனால் தன்னம்பிக்கை ஏற்படும். எதிர்பாராத செய்திகள் மனமகிழ்ச்சியை தரும். விநோதசெயல்கள் விபரீதத்தை ஏற்படாதவண்ணம் ஈடுபடவும். புதிய திட்டங்கள் வெற்றி பாதைக்கு வழிவகுக்கும். பயணங்கள் செல்வதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தேடி தரலாம். சாதுக்களின் ஆசிர்வாதத்தை பெறுவதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். நன்மையானவற்றை சிந்தித்தால் வாழ்வில் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: பட்டு துணி
வழிபாடு: குருபகவான்

 
 

 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி,  ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம் விட்டுப்பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் முறுகல் நிலை தோன்றுவதுடன் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இல்லாததால் பணவரவு தடைபடும். நன்மைபயக்கும் காரியங்கள் செய்ய சந்தர்ப்பங்கள் கிடைக்கக் கூடும். நிம்மதியான நித்திரை மனநிறைவை தரலாம். நாவுக்கு சுவையான அறுசுவை உணவு கிடைக்கும். பிறர் உபகாரம் பெற நேரிடும். சில உடல் உபாதைகள் மனசங்கடங்களை உருவாக்கும், எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தெய்வ வழிபாடுகள் குடும்ப சூழலை மாற்றும். நாம் தொடங்கும் காரியத்தில் தடைகள் ஏற்பட்டாலும் வார இறுதியில் தடைகள் நீங்கி முன்னேற்றம் அடையலாம். தோல்விகளை கண்டு துவளாமல் துணிச்சலுடன் செயற்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்  
வழிபாடு: பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--