2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

‘இது ஒன்றும் புதுமையும் அல்ல’

Editorial   / 2017 மே 22 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓர் அடர்ந்த காடு; காட்டை ஊடறுத்து அகன்ற நெடுஞ்சாலை; இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கின்றார். சற்றுநேரத்தில் சிங்கங்களின் கூட்டம் ஒன்று சாலையின் குறுக்கே சென்று, அடுத்த பக்கமாய் போய்க் கொண்டிருந்தது. 

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர், புன்முறுவலுடன் வண்டியை நிறுத்தித் திரும்பிப் பார்க்கின்றார். எல்லாச் சிங்கங்களும் சென்ற பின்பு, தனது பயணத்தைத் தொடர்கின்றார். 

திரைப்படத்தில் வரும் இக்காட்சி நிஜமானது. வர்ணனையாளர் சொல்கின்றார், “இங்குள்ள மக்கள், விலங்குகளின் வாழ்வுடன் தங்களையும் இணைத்துக் கொண்டுவிட்டார்கள். இது ஒன்றும் புதுமையும் அல்ல. 

விலங்குகளுக்கான உணவு காடுகளில் இருப்பதனால், அவை ஊர் மனைகளில் நுழையமாட்டாது. இதுவே உண்மை. காடுகளை அழிப்பதனால்தான் பிரச்சினைகள் உருவாகும்.  

வாழ்வியல் தரிசனம் 22/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X