2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

பட்டு எடுக்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டு நகர், வாவிக்கரை வீதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் பட்டு எடுக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

மட்டக்களப்பு- வாவிக்கரை வீதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக, மட்டக்களப்பு நகரின் மத்தியிலுள்ள வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பட்டு கொண்டுசெல்லும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் சிறப்பம்சமாக அமர்ந்த நிலையில் உடம்பில் அலகேற்றப்பட்டு அடியார் ஒருவர் பறவைக்காவடி எடுத்து அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார்.

மேளங்கள் முழங்க சிறுவர்களின் காவடியாட்டத்துடன் கும்மி, கரகம் போன்ற நடனங்களுடன், பக்தி பூர்வமாக பட்டுக்கொண்டுசெல்லப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--