2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}-வி.ரி.சகாதேவராஜா, வசந்த சந்திரபால


யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து  60 தினங்கள் பயணித்த வேல்சாமி மகேஸ்வரன் தலைமையிலான கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர் தங்களது பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து தங்களது பயணத்தை ஆரம்பித்த இக்குழுவினர் உகந்தைமலை முருகன் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்நிலையிலேயே கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர் தங்களது பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

இக்குழுவினருடன் பயணித்த சிலர் உகந்தையோடு பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தனர்.

உகந்தை முருகன் ஆலயத்தில் காரைதீவு தங்குமடத்தில் இவர்கள்  16 தினங்களும் நடையில்லாமல் ஓய்வெடுத்து வந்தனர். முதலாம் திகதி பாதை திறக்கப்பட்டதும் காட்டுக்குள் இவர்கள் இறங்கியுள்ளனர்.

கதிர்காம உற்சவம் ஒரு மாத காலம் பிற்போடப்பட்டது. கதிர்காம உற்சவம் இம்மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகி 22ஆம் திகதி முடிவடைகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--