2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

குருமண்வெளி விநாயகப் பெருமான் கோவில் கும்பாபிஷேகம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முணை தென் எருவில் பற்று பிரதேசத்தின் தெற்கே மட்டக்களப்பு வாவி அருகே அமைந்துள்ள குருமண்வெளி விநாயகப் பெருமானுக்கும் அன்னை முத்து மாரிக்கும் சர்வ மங்கலம் தரும் விஜய வருடம் பங்குனி திங்கள் 26ஆம் நாள் புதன்கிழமை (09) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வளர்பக்க தசமி திதியும் சித்த யோகமும், பூச நட்சத்திரமும், இடபலக்கினமும் குருகாலவோரையும் கௌரி சுகம்தரும் மு.ப 8.20 மணிமுதல் 10.12 மணி வரையுள்ள சுபமுகுத்த வேளையில் மஹா கும்பாபிஷேக திருக்குடநன்னீராட்டு விழா நடைபெற்றது.

மிகவும் சிறப்பான முறையில் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பெரும் திரளன மக்கள் ஆலயத்திற்கு வருகைதந்து இறைவனுடைய திருவருளை பெற்று கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .