Editorial / 2019 ஜூன் 10 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் பிரபல நடிகரும், கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மிகவும் கவலைக்கிடமாக இருந்துவந்த நிலையில், அவர் இன்று (10) அதிகாலை 2 மணியளவில் உயிர் இழந்தார்.
என்ஜினியரிங் படித்த கிரேஸி மோகன் நாடகங்கள் எழுதத் தொடங்கியதுடன், பின்னர் சினிமா துறையில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி நடிகரானார். நடிகர் கமல் ஹாஸனின் ஆஸ்தான வசனகர்த்தாவாக இருந்தவர் கிரேஸி மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நாடக எழுத்தாளராக விளங்கிய இவருக்கு ஏராளமான இரசிகர்கள் இருந்துவந்தததுடன், இவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்காக பலரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்திருந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பானது சினிமா உலகு மட்டுமன்றி நாடக உலகுக்கும் பெரும் இழப்பென்பது குறிப்பிடத்தக்கது.
26 minute ago
39 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
39 minute ago
58 minute ago
1 hours ago