2020 நவம்பர் 28, சனிக்கிழமை

4 கால், 4 கைகளுடன் பிறந்த குழந்தை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


தெற்கு சீனாவின் குவாங்டன் மாகாணத்தில் நான்கு கைகளுடனும் நான்கு கால்களுடனும் கூடிய ஒரு அதிசயக்குழந்தையொன்று ஏப்ரல் 2ஆம் திகதி பிறந்துள்ளது.

பிறந்து 13 நாட்களேயான இக்குழந்தை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு மேலதிக மூட்டுக்கள் வெற்றிகரமாக வேறாக்கப்பட்ட நிலையில் சீனாவின் ஹுய்ஸோ மருத்துவனையில் சிகிச்சைபெற்று வருகின்றது.

ஹுய்ஸோ நகரைச்சேர்ந்த இக்குழந்தை ஒட்டுப்பிறவியாக பிறந்துள்ளது. அதாவது ஒரு தலையையும் நான்கு கை மற்றும் நான்கு கால்களையும் கொண்டு பிறந்துள்ளது.

இக்குழந்தைகளை சத்திரசிகிச்சை செய்த மருத்துவர்கள், அக்குழந்தைகள் இரட்டை குழந்தைகளாக பிறந்திருக்க வேண்டியவை. ஆனால் இக்குழந்தைகளில் ஒன்று வளர்ச்சி குன்றியமையின் காரணத்தினால் உருகுறைந்த நிலையில் பிறந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிறக்கும் போது இக்குழந்தைகளின் எடை 3 கிலோ கிராமாக இருந்தது, சத்திரசிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்ட குழந்தையின் எடை 0.6 கிலோ கிராமாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.

இக்குழந்தை பிறவியிலேயே நிமோனியா மற்றும் இருதய நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குழந்தைகள் சீனாவில் பிறப்பது சகஜமான விடயம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நான் எனது குழந்தைகளை பல மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால் ஏன் இவ்வாறு குழந்தைகள் பிறந்துள்ளன என்பதற்கான பதில் எனக்கு இன்னமும் கிடைக்குவில்லை என அக்குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .