Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 ஜூன் 05 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி, இன்று 05) பிணையில் விடுவித்தார்.
அநுர சேனநாயக்கவால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக, கடந்த வெள்ளிக்கிழமை (02) பிணை வழங்கினார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பிணை உத்தரவுக்கு அமையவே, நீதவான் நீதிமன்றத்தால் அவர், இன்று பிணையில் விடுக்கப்பட்டார்.
கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அநுர சேனநாயக்க, ஒரு வருடத்துக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
8 minute ago
8 minute ago
11 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
8 minute ago
11 minute ago
15 minute ago