2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

புலித் தொப்பி விவகாரம்: மூவரும் விடுதலை

Thipaan   / 2017 ஜூலை 13 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை இலண்டனுக்கு அனுப்ப முயன்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு 15 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரையும், கொழும்பு நீதவான் நீதிமன்றம், நேற்று (12) விடுதலை செய்தது.

 

அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி, நந்திக்கடல் பகுதியில் இராணுவ தொழிநுட்பப் பிரிவில் கடமையாற்றிய, நகுலன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் நகுலராசா ஜேசுரத்னம் ஜெகசம்சன், மகாதேவா பிரசன்னா, ஆகியோரே விடுவிக்கப்பட்டனர். 

சந்தேகநபர்களின் சட்டத்தரணியால் பல தடவைகள் பிணை கோரப்பட்டு, அது நீதவான் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டிருந்தது.  

சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்களை விடுவிப்பது தொடர்பில், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதவான் நீதிமன்றத்தால் கோரப்பட்டிருந்தது.  

சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் தமது நிலைப்பாட்டை அனுப்பியிருந்த நிலையிலேயே, கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய, அவர்கள் மூவரையும் விடுவித்தார். 

நாரஹேன்பிட்டியிலுள்ள விரைவு அஞ்சல் (கொரியர்) நிறுவனத்தினூடாக, புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை மிகவும் சூட்சுமமான முறையில் பொதியொன்றுக்குள் மறைத்து வைத்து, அதனை இலண்டனுக்கு அனுப்பமுயன்றமை தொடர்பில், வவுனியாவைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.  

பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளிலிருந்து, சுப்பிரமணியம் நகுலராசா என்பவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .