Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள குறிஞ்சாமுனையில், கணவனும் மனைவியும், அவர்களது வீட்டிலிருந்து இன்று (19) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளரென, வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
வழங்கப்பட்ட தகவலுக்கமைய, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறிஞ்சாமுனையைச் சேர்ந்த நீலவண்ணன் லோகநாயகி (வயது 29), கந்தசாமி வேதநாயகம் (வயது 36) ஆகியோரின் சடலங்களை மீட்டுள்ளனர்.
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என, பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், அவர்களின் உறவினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து, சில தடயப் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இத்தடயப் பொருட்களின் மூலம், இங்கு கொலை இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில், தொடர்ச்சியாக குடும்பச் சண்டை இடம்பெற்று வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டது எனவும், அயலவர்கள் தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, கணவன் தனது உயிரை மாய்த்திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.
சடலங்கள், சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
(பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், நடராஜன் ஹரன், க.விஜயரெத்தினம்)
5 hours ago
9 hours ago
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
15 Sep 2025
15 Sep 2025