2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கொலைகளுடன் தொடர்புடைய மூவர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரி கொலை மற்றும் கொழும்பு, கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளன்.

கொழும்பு, கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மனித கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்ட்பாஸ் பகுதியில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற மனித கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், நீதிமன்றில் இன்று (03) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் இன்று (03) முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X