Kanagaraj / 2016 மே 24 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தவறு செய்ததாகக் கூறப்படும், நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியின் தலையில், அவ்வகுப்பில் பயிலும் ஏனைய 44 மாணவிகளைக்கொண்டு தலையிலேயே குட்டவிட்ட ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டுக் குழுவின் அதிகாரியான கே. நாணயக்கார தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், காலியில் உள்ள பிரசித்திபெற்ற மகளிர் வித்தியாலயமொன்றிலேயே நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
அந்த வித்தியாலயத்துக்கு பயற்சிக்காக வருகைதந்திருந்த விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த ஆசிரியையே, இவ்வாறு தண்டனை வழங்கியுள்ளார்.
இவ்வாறான மோசமான தண்டனையை வழங்குவதன் ஊடாக, பிள்ளைகள், மன அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவற்றைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவ்வதிகாரி தெரிவித்தார்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago