2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

Menaka Mookandi   / 2016 மார்ச் 16 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம, வீதாகம, சிறிராஜ மாவத்தையில் இரு கைத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளை தம்வசம் வைத்திருந்த நான்கு சந்தேகநபர்களை பாணந்துரை பிரதேச பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ள இச்சந்தேகநபர்கள், தெனியாய, தம்புளை, அநுராதபுரம் மற்றும் அவிஸ்ஸாவலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், அமைச்சொன்றின் முன்னாள் செயலாளர் ஒருவரது பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், இராணுவத்தின் முதலாவது கஜபா படையணியைக் சேர்ந்த முன்னாள் வீரர் ஒருவரும் விசேட அதிரடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதி சொகுசுவாய்ந்த கார் ஒன்றிலேயே அவர்கள் இந்த ஆயுதங்களை எடத்துச்சென்றுகொண்டிருந்துள்ளனர். இவர்களிடமிருந்து இரு கைத்துப்பாக்கிகளும் 28 துப்பாக்கி ரவைகளும் காணப்பட்ட நிலையில் அவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .