2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

13 கஞ்சா பைக்கட்டுகளுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                       (மொஹொமட் ஆஸிக்)
கஞ்சா பைக்கட்டுகள் 13 வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் ஹம்பாந்தோட்டடையை சேர்ந்த ஒருவரை கண்டி அலவத்துகொடை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

அக்குறணை குருகொடை சந்தியில் வைத்து இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த இந்நபர் ஆறு மாதங்களுக்கு முன் இப்பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை  திருமணம் செய்து கொண்டவரெனவும் இவர் போதை பொருளுக்கு அடிமையாகிய ஒருவர் என்றும் பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இவருக்கு எதிராக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் 12 குற்றங்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் உள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .