2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு நகரில் கடையுடைத்து பொருட்கள் கொள்ளை

Kogilavani   / 2012 நவம்பர் 21 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், லோஹித்)

மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்னால் அமைந்துள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்று உடைக்கப்பட்டு பெருமளவான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு மூடப்பட்ட மேற்படி கடையை நேற்று காலை திறந்து பார்க்கும்போது கடை உடைக்கப்பட்டு  கொள்ளையிடப்பட்டமை தெரியவந்தததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையில் மேற்கூரை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .