2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மூன்று மாடுகள் திருட்டு: மூவர் கைது

Kogilavani   / 2013 ஜூலை 20 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மூன்று மாடுகளை வான் ஒன்றில் கடத்திச்செல்ல முற்பட்ட மாதம்பை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மாதம்பை பழைய நகரில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாதம்பை பழைய நகரிற்குட்பட்ட பகுதியொன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று மாடுகளைக் காணவில்லை என பிரேமசிரி மஹிந்த சில்வா என்ற  82 வயதுடைய நபர் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது வானில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி மூவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளை தொடர்ந் அவர்களை சிலாபம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--