2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூரில் தங்கநகைகள் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரிலுள்ள வீடொன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 15 பவுண் தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிராம நீதிமன்ற வீதியிலுள்ள வீடொன்றிலேயே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் தனது கணவர் அதிகாலை வேளைத் தொழுகைக்காக வீட்டை விட்டு வெளியேறி பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தார். இதன்போது பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு வீட்டினுள் நுழைந்த இருவர் தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இக்கொள்ளையை புரிந்ததாக இவ்வீட்டு உரிமையாளரான பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் செய்த  முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இக்கொள்ளையர்கள் அச்சுறுத்தி இப்பெண்ணின் கழுத்திலிருந்த தங்கநகைகளையும் அறுத்து எடுத்ததுடன், வீட்டிலிருந்த தங்கநகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஏ.இஷட்.ஹஸன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--