2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் ஒருவர் வெட்டிக் கொலை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, போலவலானையில் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட  ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளது. 

போலவலானை, வேபட வீதியைச் சேர்ந்த  மானமுதலிகே லால் பிரியன்த அப்புஹாமி (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் தான் வளர்க்கும்  மாட்டுக்;கு ஞாயிற்றுக்கிழமை (30) இரவு 11 மணியளவில்  தீவனம் போட்டுக்கொண்டிருந்ததை  சிலர் கண்டதாகவும்  இந்நிலையில், இவர் திங்கட்கிழமை  படுகொலை  செய்யப்பட்ட நிலையில்  கிடப்பதை முச்சக்கரவண்டிச் சாரதி  பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .