2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை சவக்காலைக்கு  அருகிலிருந்து பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும கொண்ட எஸ்.ராமசந்திரன் (வயது 50) என்பவரின் சடலம் திங்கட்கிழமை (14) மாலை மீட்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

02 ஆண் மற்றும் 04 பெண் பிள்ளைகளின் தந்தையான இவர்,  மருதமுனையைச் சேர்ந்த ஒருவரின் மாட்டுப்பண்ணையில்  பணியாற்றி வருகின்றார்.

சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட  கல்முனை  நீதவான் நீதிமன்ற நீதவான் அன்ரனி ஜுட்ஸன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை  கல்முனை ஆதார வைத்திசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எம்.கப்பார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--