Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
எஸ்.என். நிபோஜன் / 2019 நவம்பர் 13 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கிராஞ்சி உதய செந்தாரகை விளையாட்டுக் கழகம் நடத்திய கற்பகா தொடரில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
கிராஞ்சி உதய செந்தாரகை விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விலகல் முறையிலான இத்தொடரின் இறுதி போட்டியில், வேரவில் ஜெபமீட்பர் விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.
சம்பியனான பாடுமீன் விளையாட்டுக் கழகம், வெற்றிக் கிண்ணத்தையும், 70,000 ரூபாய் பணப்பரிசிலையும் தனதாக்கிக் கொண்டதுடன், இரண்டாமிடத்தைப் பெற்ற ஜெபமீட்பர் விளையாட்டுக் கழகமானது இரண்டாமிடத்துக்கான வெற்றிக் கிண்ணத்தையும் 40,000 ரூபாய் பணப்பரிசையும் தமதாக்கிக் கொண்டனர்
இறுதிப் போட்டியில், பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன்ம் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா , மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் நிமலதாசன் கலந்துகொண்டு வெற்றிக் கேடயங்களை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
49 minute ago
54 minute ago