2020 நவம்பர் 25, புதன்கிழமை

நடாலின் ஸ்பெய்னை வென்று சம்பியனானது ஜோக்கோவிச்சின் சேர்பியா

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க கிண்ணத் தொடரில், உலகின் முதல்நிலைவீரரான ரஃபேல் நடாலின் ஸ்பெய்னை வென்று உலகின் இரண்டாம்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச்சின் சேர்பியா சம்பியனானது.

தத்தமது அரையிறுதிப் போட்டிகளின் முறையே ரஷ்யா, அவுஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு சேர்பியாவும், ஸ்பெய்னும் முன்னேறியிருந்த நிலையில், நேற்றைய இறுதிப் போட்டியின் முதலாவது தனிநபர் போட்டியில், சேர்பியாவின் டுஸன் லஜோவிச்சை 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்ற உலகின் 10ஆம் நிலை வீரரான றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட், ஸ்பெய்னுக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், இறுதிப் போட்டியின் இரண்டாவது தனிநபர் போட்டியில் ரஃபேல் நடாலை எதிர்கொண்ட நொவக் ஜோக்கோவிச், 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று, மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டியின் நிலையை 1-1 எனச் சமப்படுத்தினார்.

இதையடுத்து, தீர்மானமிக்க இரட்டையர் போட்டியில் பப்லோ கரென்னோ புஸ்டா, பெலிசியானோ லொபேஸ் இணையை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் விக்டர் ட்ரொய்ஸ்கியுடன் வீழ்த்திய நொவக் ஜோக்கோவிச், சேர்பியாவுக்கு வெற்றியை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .