2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

நான்காமிடத்துக்கு முன்னேறினார் செளதி

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு நியூசிலாந்தின் டிம் செளதி முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே, இன்று வெளியிடப்பட்ட தரப்படுத்தலில் ஆறாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை டிம் செளதி அடைந்துள்ளார்.

இதேவேளை, குறித்த டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, 11ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

இந்நிலையில், இந்த டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட், 13ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. நீல் வக்னர், 3. ஜேஸன் ஹோல்டர், 4. டிம் செளதி, 5. ககிஸோ றபாடா, 6. மிற்செல் ஸ்டார்க், 7. ஜஸ்பிரிட் பும்ரா, 8. ஜேம்ஸ் அன்டர்சன், 9. ட்ரெண்ட் போல்ட், 10. ஜொஷ் ஹேசில்வூட்.

இதேவேளை, மேற்குறிப்பிட்ட டெஸ்டில் 78 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் செட்டேஸ்வர் புஜாரா, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஒன்பதாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஸ்டீவ் ஸ்மித், 2. விராட் கோலி, 3. மர்னுஸ் லபுஷைன், 4. கேன் வில்லியம்சன், 5. பாபர் அஸாம், 6. டேவிட் வோணர், 7. செட்டேஸ்வர் புஜாரா, 8. ஜோ றூட், 9. அஜின்கியா ரஹானே, 10. பென் ஸ்டோக்ஸ்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. பென் ஸ்டோக்ஸ், 3. இரவீந்திர ஜடேஜா, 4. மிற்செல் ஸ்டார்க், 5. இரவிச்சந்திரன் அஷ்வின்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .