2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

இவ்வார பங்குச் சந்தை நிலைவரம் 16.09.2019 -20.09.2019

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

16.09.2019  

மெல்ஸ்டாகோர்ப், புக்கிட் தாரா, நெஸ்லே லங்கா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 747 மில்லியனாகப் பதிவாகியிருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு யூனியன் வங்கி, பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ரேணுகா கெப்பிட்டல் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஈடுபாடு பங்கு விற்பனையில் பதிவாகியிருந்தது.  

17.09.2019  

மெல்ஸ்டாகோர்ப், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் LOLC ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 4.5 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஓவர்சீஸ் ரியால்டி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

18.09.2019  

டிஸ்டிலரீஸ், டயலொக் அக்ஸியாடா, சி ரி ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 709 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு யூனியன் வங்கி மற்றும் டயலொக் அக்ஸியாடா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பான்ஏசியன் பவர், பிரவுண்ஸ் ன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

19.09.2019  

ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ், சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி, சம்பத் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 463 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஹற்றன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி, த லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோர்பரேஷன் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு யூனியன் வங்கி, அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ், பான் ஏசியன் பவர் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் ஈடுபாடு பங்கு விற்பனையில் காணப்பட்டது.  

20.09.2019  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், LOLC டிவலப்மன்ட் ஃபினான்ஸ், சம்பத் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 542 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சம்பத் வங்கி, டயலொக் அக்ஸியாடா, டீஜே லங்கா பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு யூனியன் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அ.ப.வி.சு 0.54% சரிவையும் S&P SL20 1.74% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 1.4 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .