2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

‘அண்ணாத்த’இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு

Editorial   / 2021 ஜனவரி 20 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே நடிக்கிறது.

கடந்த மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தபோது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த உள்ளனர். ரஜினி ஏப்ரல் மாதம் வரை ஓய்வெடுக்க உள்ளதால் அதுவரை படப்பிடிப்பை நடத்த வாய்ப்பில்லை. இதனால் இதுவரை எடுத்த காட்சிகளை எடிட் செய்து முடித்துள்ளார் சிவா.

இனி அண்ணாத்த படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தான் தொடங்கப்படும் என்பதால், இயக்குனர் சிவா, சும்மா இருக்க வேண்டாமே என்று தான் அடுத்ததாக இயக்கும் சூர்யா நடிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளாராம்.

அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்ததும் சூர்யா படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளாராம் சிவா. சூர்யா – சிவா இணையும் படத்தை கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .