2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

கணவரிடம் சித்ரவதைகள் அனுபவித்தேன்; புலம்பும் பிரபல நடிகை

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன்.

மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

2005ல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2010ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். 

அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார். திருமண முறிவுகள் குறித்து மீரா வாசுதேவன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“திருமணம் முறிந்து விவாகரத்துக்கு சென்றால் இந்த சமூகம் பெண்கள் மீதுதான் குறை சொல்கிறது. ஆனால் அந்த பெண்கள் சந்தித்த தொல்லைகளை கண்டு கொள்வது இல்லை. 

நான் முதல் திருமணம் செய்து கணவரிடம் அனுபவித்த கொடுமைகள் அதிகம். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன். அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

அப்போது எனது உயிருக்கும் மிரட்டல் இருந்தது. இதனால் பொலிஸ் பாதுகாப்பு கேட்டேன். 2012ல் மறுமணம் செய்தேன். அதுவும் மகிழ்ச்சியாக இல்லை. 2வது கணவரிடமும் மன ரீதியாக சேர்ந்து இருக்க முடியவில்லை. இதனால் அதுவும் விவாகரத்தில் முடிந்தது.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--