2021 மார்ச் 08, திங்கட்கிழமை

காதலில் விழுந்த சீரியல் நடிகை?

J.A. George   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வாணி ராணி” என்ற சீரியலில் பூஜா என்ற கேரக்டரில் நடித்த நடிகை நவ்யா சுவாமி,  தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிகிருஷ்ணா என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

ரவிகிருஷ்ணா மற்றும் நவ்யா சுவாமி ஆகிய இருவரும் இணைந்து தெலுங்கில் ஒரு சீரியலில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையிலேயே காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இருவரும் ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ என்று சொல்லிக்கொள்ளும் காட்சிகள் அந்த நடன நிகழ்ச்சியில் இருந்தது என்றும் அந்த காட்சிகள் தத்ரூபமாக இருந்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் ரவி கிருஷ்ணா மற்றும் நவ்யா சுவாமி ஆகிய இருவரும் இந்த காதலை உறுதி செய்யவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .