2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

கமல்ஹாசனுடன் முதல் முறையாக இணையும் காமெடி நடிகர்

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாயகன் கமல்ஹாசனும், பிரபல காமெடி நடிகர் விவேக்கும் 'இந்தியன் 2' படத்தில் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் இணைந்தார்.

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நடிகர் விவேக் ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்', 'அந்நியன்' மற்றும் 'சிவாஜி' ஆகிய படங்களில் விவேக் நடித்திருந்த போதிலும் கமல்ஹாசனுடன் முதல்முறையாக விவேக் இணைகிறார். 

கே.பாலசந்தர் இயக்கிய 'பார்த்தாலே பரவசம்' படத்தில் கமல், விவேக் இருவரும் நடித்திருந்தாலும் இருவரும் இணைந்த காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .