2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கலவரத்துக்கு மத்தியில் தொழுகை; ’மாநாடு’ அதிரடி அப்டேட்

J.A. George   / 2020 நவம்பர் 19 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்,  எஸ் ஜே சூர்யா,  கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. 

இந்த நிலையில், மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த முக்கியமான அறிவிப்பினை சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் தன்னை சுற்றி பெரும் கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது நடுவில் அமைதியாக சிம்பு அமர்ந்து தொழுகை செய்வது போல போஸ்டர் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அத்துடன், வரும் 21 நவம்பர் 10:44 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அதிரடியான அப்டேட் ஆனது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .