2020 ஜூன் 01, திங்கட்கிழமை

சட்டையை போல் பெண்களை மாற்றுவதாக கவின் மீது சாக்சி குற்றச்சாட்டு

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று 'இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற தகுதியானவர் என்று ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கூற வேண்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை அளித்திருந்தார் 

இந்த டாஸ்க்கில் சாக்சி குறித்து கவின் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். ஒரு கட்டத்தில் சாக்ஸி தன்னை வைத்து கேம் விளையாடுவது போல் தெரிந்ததால் தன்னுடைய நிலையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடை பார்த்த சாக்சி இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியாதாவது: கவினிடம் மூன்று கேள்விகள் கேட்க விரும்புகிறேன். ஒன்று முதலில் யார் யாரை புரபோஸ் செய்தது என்று தெரிய வேண்டும். நான் கவினை முதலில் புரபோஸ் செய்தேனா? அல்லது கவின் என்னிடம் புரபோஸ் செய்தாரா? இதுகுறித்து ஆடியன்ஸ்களுக்கு முழுவதும் தெரியுமா? என்று தெரியவில்லை. 

இரண்டாவது கவின் என்னை ஒரு கட்டத்தில் சாவடிச்சிடுவேன் என்று கத்தினார். என்னிடம் காண்பித்த இந்த கோபத்தை வனிதா உட்பட வேறு யாரிடமாவது கவினால் காண்பிக்க முடியுமா? அந்த அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுத்துக் கொள்ள காரணம் என்ன? 

மூன்றாவது கல்யாண விஷயத்தில் எனக்கு தேவையான நான்கு விடயங்களில் நீ வந்துவிட்டாய், எனவே நீ எனக்கு பொருத்தமானவர் என்று கவின் தான் என்னிடம் கூறினார். 

மேலும் ஷெரினிடம் அவர் கூறும்போது கூட 'இனிமேல் சாக்ஸி என்னுடைய வீட்டில் தான் இருப்பார். நீங்கள் சாக்ஸியை பார்க்க வேண்டும் என்றால் எங்கள் வீட்டில் தான் வரவேண்டும் என்று கல்யாணம் வரைக்கும் எடுத்துச் சென்றது கவின்.  

ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட மனதில் கொள்ளாமல் நான் கேம் விளையாடியதாக என் மேல் பழி போடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் 

மேலும் பலமுறை கவின் மற்றும் லாஸ்லியாவிடம் இந்த பிரச்சனை குறித்து நாம் மூவரும் உட்கார்ந்து பேசிக் கொள்வோம் என்று கூறினேன். ஆனால் ஒருமுறை கூட இருவரும் என்னிடம் வந்து பேசவில்லை. சிறையில் இருக்கும்போது லாஸ்லியாவிடம் என்னுடைய மனதில் உள்ள அனைத்தையும் கூறி விட்டேன். ஆனால் லாஸ்லியா இதனை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் 

மேலும் கவின் உன்னால் எப்படி பொண்ணுங்கள சட்டையை மாற்றுவது போல் மாற்றிக் கொள்ள முடிகிறது? பெண்களால் அப்படி ஒருபோதும் மாற்ற முடியாது. உன்னுடைய செயல் மனிதத் தன்மை இல்லாத ஒரு செயல் என்றும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X