Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 27 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, அடுத்து 'ச்சப்பக்' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேக்னா குல்சார் இயக்கவுள்ள இந்தத் திரைப்படம், அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, முகத்தில் தோல் சுருக்கங்களுடன் இருக்கும் தீபிகா படுகோனேவின் தோற்றம், மிக இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
லட்சுமி அகர்வால், அவருடைய 15ஆவது வயதில், அசிட் வீச்சுக்கு ஆளானார். தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த லட்சுமி மீது, ஒருவர், அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அசிட் வீசினார். அதில் காயமடைந்து தன் அழகான முகத்தோற்றத்தை இழந்த லட்சுமி, அதன் பின், அசிட் விற்பனைக்குத் தடை விதிக்கவும் அதனால் ஏற்படும் வன்முறைகளை எதிர்த்தும் போராடி வருகிறார். 'ஸ்டார் சேல் அசிட்' என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.
2014ஆம் ஆண்டில், சர்வதேசத் துணிச்சல் பெண் விருதை, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவிடம் இருந்து பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவரது கதையை மய்யப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் 'ச்சப்பக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, நேற்று முதல் டில்லியில் ஆரம்பமானது. இத்திரைப்படத்தை, தன் சொந்த நிறுவனமான கேஎ என்டர்டெயின்மென்ட் மூலம் பாக்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகா தயாரிக்கிறார். இது, 2020 ஜனவரி 20இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
47 minute ago